தமிழக அரசின் மகளிருக்கான ‘வெற்றிப் பயண’ திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர், இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
