Skip to content

வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு

திருச்சி, ஸ்ரீரங்கம், திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து பிரசாதம் வழங்கும் நிகழ்வில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கரணை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து கரணின் சகோதரர்கள் கமலேஷ், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை அடித்து உடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அப்பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்டதால் இந்த கோஷ்டி மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தி குத்தினால் படுகாயமடைந்த கரணை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இச்சம்பவத்தில் காயம் அடைந்த பிரபாகரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மொத்தம். இச்சம்பவம் குறித்து கரண் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன் மீதும் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் கரன் அவரது சகோதரர்கள்
கமலேஷ், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் கரண் பிரபாகரன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!