Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு..திருச்சி க்ரைம்

திருச்சி பெரிய மிளகு பாறை வெடுவா தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் இவரது மனைவி கல்யாணி ( 80 ) இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என நான்கு வாரிசுகள் உள்ளனர் கல்யாணிக்கு சொந்தமாக 4970 சதுர அடி நிலம் உள்ளது. இதில் மூத்த மகனுக்கும் இரண்டாவது மகனுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுத்தார் திருச்சி ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த இளைய மகன் குமார் நிலத்திற்கு பதிலாக ஐந்தரை பவுன் நகையாக கல்யாணியிடமிருந்து பெற்றார் இதைத்தொடர்ந்து அவர் தன் தாய் கல்யாணி வீட்டுக்குள் புகுந்து நிலத்தை கேட்டு தகராறு செய்துள்ளார் அப்போது கல்யாணி அவர் தாக்கி காலால் உதைத்து மூஞ்சியில் காயப்படுத்தியுள்ளார் காயம் அடைந்த கல்யாணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகமாக மது குடித்த வாலிபர் சாவு

திருச்சி சங்கிலியாண்ட புரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( 25 ). இவர் இதயம் நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து இவர் அதிகப்படியாக மது குடித்துள்ளார் மேலும் சிகிச்சை பெற்று வந்ததற்கு மாத்திரை உட்கொள்ளவில்லை என தெரிகிறது நேற்று வரை அவர் வீடு திரும்பவில்லை இதனால் அவரது பெற்றோர் அவரை தேடினர் அப்போது கார்த்திகேயன் தன் வீட்டின் அருகே மயங்கி கிடந்தார் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் அதிரடியாக கைது.

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலை பட்டிப்புதூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த பூபாலன் 33 என்ற வாலிபரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர் அவர் கஞ்சா வழக்கில் சரித்திர பதிவேடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா , புகையிலை விற்ற 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் ஜீயாபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ராம்ஜிநகர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மில்காலனியைச் சேர்ந்த முழுமதி (வயது 65) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், மணிகண்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த மாணிக்கம் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!