Skip to content
Home » ஆன்மீகம். » Page 8

ஆன்மீகம்.

இன்றைய ராசிபலன்… (03.03.2024)

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம். ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். மிதுனம் இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். கடகம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சிம்மம் இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிட்டும். கன்னி இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு உயரும். துலாம் இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வு மந்த நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டாகும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தனுசு இன்று உறவினர்கள் வகையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். பயணங்களில் சற்று கவனம் தேவை. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மகரம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கும்பம் இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டார நட்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மீனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

இன்றைய ராசிப்பலன்… (02.03.2024)

சனிக்கிழமை … மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 08.17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனமும், பேச்சில் நிதானத்துடனும் இருப்பது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ரிஷபம் இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். மிதுனம் இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை. சிம்மம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். துலாம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருச்சிகம் இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். தனுசு இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மகரம் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும். கும்பம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மீனம்… Read More »இன்றைய ராசிப்பலன்… (02.03.2024)

இன்றைய ராசிபலன்… (01.03.2024)

வௌ்ளிக்கிழமை.. மேஷம் இன்று உங்களுக்கு பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மிதுனம் இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும். கடகம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். கன்னி இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வியாபாரம் ரீதியாக சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலனை அடைய முடியும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். துலாம் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் அனுகூலம் ஏற்படும். தனுசு இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். மகரம் இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கும்பம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும். மீனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

இன்றைய ராசிபலன்… (29.02.2024)

வியாழக்கிழமை.. மேஷம் இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். ரிஷபம் இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்-கு வந்து சேரும். மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். கடகம் இன்று உடன் பிறந்தவர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். செலவுகள் குறையும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிம்மம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும். கன்னி இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். துலாம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். மகரம் இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கும்பம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலப் பலன் உண்டாகும். மீனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வயதில் மூத்தவர்களிடம் பேசும் பொழுது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

இன்றைய ராசிபலன் – 28.02.2024

  • by Senthil

  மேஷம்   இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 28.02.2024

இன்றைய ராசிபலன்… (27.02.2024)

செவ்வாய்கிழமை..  மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும். மிதுனம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை. கன்னி இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். துலாம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். நினைத்தது நிறைவேறும். தனுசு இன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும். மகரம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் வழியில் மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கும்பம் இன்று நீங்கள் சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை. மீனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற தடைகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலைபளு குறையும்.

இன்றைய ராசிபலன் – 26.02.2024

இன்றைய ராசிப்பலன் –  26.02.2024   மேஷம்   இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள்… Read More »இன்றைய ராசிபலன் – 26.02.2024

இன்றைய ராசிபலன்- (25.02.2024)…

  • by Senthil

ஞாயிற்றுக்கிழமை… 25.02.2024 மேஷம் இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் சுபசெய்திகள் வரும். ரிஷபம் இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். சிம்மம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். கன்னி இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். துலாம் இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். விருச்சிகம் இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை. மகரம் இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. கும்பம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்- (25.02.2024)…

மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு மாதம் பௌணர்மி நாளில்108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில்… Read More »மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

இன்றைய ராசிபலன் … (24.02.2024)…

  • by Senthil

சனிக்கிழமை .. (24.02.2024) மேஷம் இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மனசங்கடங்கள் நிலவும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். கடகம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும். சிம்மம் இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உடல்நிலை சீராகும். கன்னி இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும். துலாம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். விருச்சிகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். மகரம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் நிதானம் தேவை. கும்பம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.… Read More »இன்றைய ராசிபலன் … (24.02.2024)…

error: Content is protected !!