Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்

கரூர் அருகே வெள்ளியணை கடைத்தெரு பகுதியில், காவிரியில் இருந்து திண்டுக்கல் சென்ற காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாகி வருகிறது.

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த கூட்டுக் குடிநீர் திட்ட ராட்ச குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சுமார் 1 மணி நேரம் தண்ணீர் வெளியேறியதால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெள்ளியணை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது

இதனால் வெள்ளியணை கடைவீதியில் உள்ள பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அவதி அடைந்தனர்.

அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் காவிரி கரையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் நீர் உந்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.

error: Content is protected !!