திருச்சி துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள 31 என். ஜ. டி. நிறுவனங்களிலேயே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்ற பெருமைக்குரியது.
இதில் இளங்கலை , முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 7,555 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த தொழில்நுட்ப பூங்காவில் ப்ரொடக்ஷன் இன்ஜினியரிங் டிப்பார்ட்மென்டில் ஜெரால்டு என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் பேராசிரியை ஒருவருக்கு இ- மெயில்
மூலம் ஆபாச செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேராசிரியை கொடுத்த புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ஜெரால்டை கைது செய்துள்ளனர். புகழ்வாய்ந்த என்ஐடி நிறுவனத்தில் சக பெண் ஆசிரியருக்கு பேராசிரியர் ஒருவர் ஆபாச செய்தி அனுப்பி கைதான விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
