Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் ஆணையருக்கு…. மத்திய அரசு திடீர் அழைப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான  ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பு தயார்நிலையை மறுபரிசீலனை செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் சக தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோரை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா இன்று அழைத்துள்ளார்.

இந்த ஆலோசனையில் மாநிலங்களில் மத்திய படைகளை நிலைநிறுத்துவது குறித்து விவாதிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.  தேர்தல் ஆயத்த பணிகளை மறுபரிசீலனை செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தலுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசாரை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் சுமார் 12.5 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் தலைமை ஆணையர் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். பல்வேறு கட்டங்களில் மத்திய ஆயுதப்படைகளை அனுப்புவதில் ரெயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!