Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே தொகுதியில் 7 முறை போட்டியிடும் சக்கரபாணி

தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில், ஒரே சின்னத்தில்,ஒரே வேட்பாளரை தொடர்ச்சியாக 6 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்து சாதனையை ஒட்டன்சத்திரம் மக்கள் நிகழ்த்தி உள்ளனர். தற்போது ஏழாவது முறையாக நிகழ்த்த உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு இதுவரை 16 பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளன. இந்த தேர்தல்களில் அதிகமான வெற்றிக்கு சொந்தக்காரரான திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி உள்ளார்.அவர் வெவ்வேறு தொகுதியில் போட்டியிட்டு 13 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஒரே தொகுதியில் மூன்று, நான்கு,ஐந்து,ஆறு முறை என வெற்றி பெற்றவர்கள் பலர் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆறு முறை ஒரே வேட்பாளர், ஒரே தொகுதியில் வெற்றி கனியை வழங்கிய தொகுதி என்ற சிறப்பு பட்டியலில் அறந்தாங்கி, நத்தம்,ஒட்டன்சத்திரம் ஆகியவை உள்ளன. 1996-ல் தொடங்கி 2001,2006,2011,2016,2021 என ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து ஆறு முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. தற்போது ஏழாவது முறையாக ஒரே தொகுதியில், ஒரே சின்னத்தில்,ஒரே வேட்பாளர் தொடர்ச்சியாக போட்டியிடுவது தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான மின்சாரம் சாலை வசதி, குடிநீர் வசதி, பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துள்ளார். அதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மலையில் விளையக்கூடிய மா, பலா,வாழை உள்ளிட்ட பழங்களை சீர்வரிசையாக எடுத்துச் சென்று அமைச்சருக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.

error: Content is protected !!