Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“சேப்பாக்கம் என்றும் கழகத்தின் கோட்டை” – உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பதிவு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.

இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட உள்ளார். இந்த நிலையில் இந்த வாய்ப்பை வழங்கிய கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெருமைமிகு நம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ள கழகத்தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைக்கழகத்துக்கும்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி என்றென்றும் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், நமது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் – தொகுதி மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று, அதனை நம் தலைவரின் கரங்களில் ஒப்படைப்போம்! வெல்வோம் ஒன்றாக!” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!