Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகாதேவன் சென்னை ஐகோர்ட்(பொ) தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

கடந்த ஆண்டு மே 28-ம் தேதி  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த ஆண்டு மே 28-ம் தேதி பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஓராண்டு பணியாற்றிய கங்காபூர்வாலா 23-ம் தேதி (நாளை) பணி ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். எஸ்.வி. கங்காபூர்வாலா நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவன்  பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.நாளை மறுநாள் (24-ம் தேதி) முதல் தலைமை நீதிபதி தொடர்பான பணிகளை ஆர்.மகாதேவன் கவனிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!