சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று (செப்.3) CM விஜய் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது என்றும், உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்குவது காலத்தின் கட்டாயம்” என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதற்கான சட்ட அங்கீகாரங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
