தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி, தருமபுரியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கொஞ்சம் தருமபுரியை விட்டு வெளியே வாருங்கள் மேடம்; அருகில் திருவண்ணாமலை, கடலூர் என பல ஊர்கள் இருக்கும்போது எல்லாத் திட்டங்களையும் தருமபுரிக்கே கொண்டு செல்ல பார்க்கிறீர்கள்” என நகைச்சுவையாக கூறினார். அவரின் இந்த கலகலப்பான பதிலை கேட்டு, அவையில் சிரிப்பலை எழுந்தது.
