தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகே ரயில்வே கேட் பகுதியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலையில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 57 பயணிகளுடன் அரசுப் பேருந்து சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் வருவதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், பேருந்து அப்பகுதியில் காத்திருந்தது.
திடீரென பேருந்தின் பேட்டரி பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து புகை அதிகரித்த நிலையில், பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற முயன்றனர். அப்போது அவசரகால கதவு திறக்கப்படாததால் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
