திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் செப்டம்பர்- 07.-08, ஆகிய தேதி நடைபெற இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 8, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுடைய ஆண்- பெண் இருபாலருக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் செப்-07- O8ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
செப்-08ம் தேதி மாலை 5.30 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
மேலும், தனி நபருக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் தனி நபர் கோப்பை வழங்கப்பட உள்ளது. தகுதி அடிப்டையில் தேர்வு

செய்யப்படும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், திண்டுக்கலில் அக்-02 முதல் 04ம் தேதி தொடங்கும் அனைத்து மாவட்டங்கள் இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட உள்ளனர்.
