Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார்

புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு 16 இடங்களில் வெல்வது அவசியம். புதுவையை பொறுத்தவரை தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி கடந்த முறையை போலவே இரண்டு தொகுதிகளில் களம் இறங்கியுள்ளார்.

போன முறை ஏனாம் தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்விய தழுவியதால், இந்த முறை புதுவை தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.தட்டாஞ்சாவடி தொகுதியில் நாம் தழிழர் கட்சி சார்பில் கார்த்தி குமாரி, பாமக சார்பாக கதிரேசன், தவெக கூட்டணியில் உள்ள நேமக கட்சி சார்பில் விநாயகம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ரங்கசாமி தட்டாஞ்சாவடி மட்டுமின்றி மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுகிறார். மங்கலம் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் ரங்கசாமியும் காங்கிரஸ் சார்பாக ரகுபதியும் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் திமுக சார்பாக ரங்கன் போட்டியிடுகிறார். தவெக சார்பாக சத்யா போட்டியிடுகிறார்.  இந்நிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் முதல்வரும் தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தை வீழ்த்தினார்.

error: Content is protected !!