தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல சார்பில் BLA2,BDA,BLC உள்ளிட்ட வாக்குச்சாவடிகுழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிருந்தாவனம் விரைவு ரயிலில் புறப்பட்டு மக்களோடு

மக்களாக பயணித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் சபாநாயகர் கு.பிச்சாண்டி, கைத்தறி அமைச்சர் காந்தி, நெடுசாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து சாலைமார்க்கமாக திருப்பத்தூர் நகர பகுதிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள சர்க்யூட் ஹவுஸிற்கு சென்றபோது திடீரென சாலை நகர் பகுதியில் வசித்து வரும் முனியப்பன் மேகலா என்பவரின் வீட்டிற்கு சென்று தமிழக அரசு வழங்கிய மகளிர் உதவித்தொகை ஐந்தாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வந்ததா என கேட்டார். அப்போது அந்தபெண் மகிழ்ச்சியுடன் மகளிர் உதவித்தொகை ஐந்தாயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் வந்ததுவிட்டது கூறினார்.
அதனை தொடர்ந்து ராஜீவ்காந்தி மைதானத்தில் ரூபாய் 15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
அப்போது பொது பணித்துறை உதவி பொறியாளர் சதீஷ் என்பவரிடம் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விரைந்து பணியை முடிக்கும்படி வலியுறுத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி உடன் இருந்தார்.

