திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” – தமிழக அரசின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைப்பேசி செயலி உருவாக்கம்.
தமிழகத்தில் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களின் எதிர்காலக் கனவுகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான ஒரு தொலைநோக்குத் திட்டமே இதுவாகும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்’ எனவும் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு படிவம் (கனவு அட்டை) வழங்கப்படும். அதில் அக்குடும்பத்தின் முக்கியமான 3 கனவுகளை அவர்கள் பதிவு செய்யலாம்.
தன்னார்வலர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாங்கி, பிரத்யேக மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.
இணையதளம்: இளைஞர்களுக்காக (15-29 வயது) ஜனவரி 11 முதல் www.ungakanavaisollunga.tn.gov.in என்ற இணையதளம் செயல்படத் தொடங்கும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையின் சிறப்பம்சங்கள்
தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், இத்திட்டம் வெறும் கணக்கெடுப்பு அல்ல, இது மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஒரு முயற்சி என்று குறிப்பிட்டார்:
“அரசு என்பது வெறும் கோப்புகளைப் பார்ப்பது மட்டுமல்ல, மக்களின் இதயத் துடிப்பை அறிவதும் ஆகும். கடந்த நான்கரை ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சி பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இப்போது, அடுத்த கட்டமாக உங்கள் குடும்பத்தின் கனவை நனவாக்க உங்கள் இல்லம் தேடி வந்துள்ளோம்.”
மக்கள் பங்கேற்பு: “மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள். உங்கள் கனவுகளை நீங்களே சொல்லுங்கள், அதைச் செயல்படுத்தும் கருவியாக இந்த அரசு இருக்கும்.”
பயனாளிகள் கருத்து: ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்றவற்றின் தற்போதைய நிலை குறித்த கருத்துக்களையும் மக்கள் இதில் பதிவு செய்யலாம்.
2030 தொலைநோக்கு: தமிழகத்தின் 2030-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்க இந்தப் புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்படும்.
இளைஞர்களுக்கு முன்னுரிமை: “நமது மாநிலத்தின் எதிர்காலம் இளைஞர்கள் கையில். அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கனவுகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.”
அரசியல் கடந்த சேவை: கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் குடும்பங்களின் தேவைகளும் இதில் கேட்டறியப்படும். என்று இவ்வாறு தெரிவித்தார்

