Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் பிறந்தநாள்-கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் VSB பரிசு

முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வழங்கினார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் விளையாட்டுப் போட்டிகள் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் கோடாங்கி பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி சுவாமி தரிசனம் செய்த

பிறகு முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வீடு வீடாக சென்று வழங்கினார்.

கரூர் நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மூன்று லட்சத்தி முப்பதாயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்டம் வழங்கக்கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இல்லம் தோறும் சென்று ஒரு வார காலத்திற்குள் வழங்கப்பட உள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார்.

நாங்கள் வீடு வாரியாக சென்ற பொழுது முதியவர்கள் இளைஞர்கள் பெண்கள் அனைவரும் எங்களுடைய முழு ஆதரவு தளபதி அவர்களுக்கு என்று உறுதி செய்து இருக்கிறார்கள்

மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலமைச்சர் துணையாக நிற்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

2026 தேர்தல் என்பது கரூர் மாவட்டத்தை பொருத்தவரை 2021 இல் எப்படி நான்கு தொகுதிகளிலும் உதயசூரியனை வெற்றி பெற செய்தார்களோ 2021 வாக்கு வித்தியாசத்தை விட 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அதைவிட மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும், இரண்டாவது முறையாக தளபதி தமிழக முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்பார் .

மத்த கட்சியினர் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கின்றனர் ஆனால் திமுகவை பற்றி மட்டும் பேசி வருகின்றனர். பல்வேறு கட்சிகள் தங்களது இருப்பை காட்டிக் கொள்வதற்காக திமுகவை பத்தி பேசி வருவதாகவும் தோழமை இயக்கங்களை மிகச் சிறப்பாக முதல்வர் வழிநடத்தி வருகிறார் . விஜய் பேசியது குறித்த கேள்விக்கு: நம் மக்கள் நேரில் சென்று பார்ப்பவர்களை பற்றி பேசி வருகிறோம் எனக்கு கூறினார்.

திமுகவை பற்றி பேசினால் மட்டுமே அவர்களது இருப்பை காட்டிக் கொள்ள முடியும் பிஜேபி அதிமுக அல்லது புதிய கட்சியாக இருக்கட்டும் இவர்கள் அனைவரும் திமுகவைப் பற்றி கருத்துக்கள் சொன்னால் தான் அவர்கள் கட்சி இருப்பதைப் போல மக்கள் மனதில் எடுத்து செல்ல முடியும் என்பதில் அவர்கள் நினைக்கிறார்கள்.

எங்களது மகளிர் படை வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து அரசனுடைய திட்டங்களை கூறி வரக்கூடிய தேர்தல் களத்தில் முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கருத்துக்களை தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதியில் திமுக வெற்றி பெறுவார்கள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு மகத்தான வெற்றி பெறும் என கூறினார்.

error: Content is protected !!