Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, பயணிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு அளித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடினார்.சில தினங்களாக நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்தும், சாலையோர டீக்கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ குடித்தும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

error: Content is protected !!