Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரியகோவிலில் சித்திரைத் தேரோட்டம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் இன்று காலை(திங்கள்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலாகலமாக நடந்தது..

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக தேரில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தோ், அலங்காரத்தின் மூலம் மொத்தம் 50 அடி உயரத்தை எட்டியுள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இத்தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்துள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளினர். பின்னா், காலை 6.20 மணிக்கு திருத்தேரை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எஸ் பி சுந்தரவதனம், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தா சுவாமி,தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வேல்முருகன், முன்னாள் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி,சதய விழா குழு தலைவர் து. செல்வம். ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் தியாகேசா, ஆரூரா என்ற பக்தி கோஷத்திற்கு மத்தியில் தேர் நிறைவீட்டு நகர்ந்து ஆடி அசைந்து வந்தது கண் கொள்ளா காட்சியாக அமைந்தது .

தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்துறை, தீணையப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து செய்திருந்தன.

மேலும் வடக்கு வீதி சாலையில் இருபுறமும் கழிநீர் செல்லும் கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ள இடங்களில் இரும்பு கம்புகளை கொண்டு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி செய்யப்பட்டிருந்தன. தேரில் உள்ள சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்ய ஏதுவாக 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!