ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து ஒரு மாணவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்?, அவரை கடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
