Skip to content
Home » கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

  • by Senthil

கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் , தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

கோவையில்,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு மற்றும் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு, ரூ11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், ரூ67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு,  அரசு நலத்திட்ட உதவிகள்  வழங்கியும்  அமைச்சர்கள் பேசினர்.

விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றது.  அதிகாரிகள்  பணிகளை கேட்டு பெற்று வருகின்றனர். நமது நகராட்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் கேட்கும் திட்டங்களை நிதி நிலைமையை பார்த்து வழங்குகின்றார். தமிழக முதல்வர் அவர்கள் 22 மற்றும் 23 ந்தேதிகளில் கோவை வருகை தர உள்ளார். அப்போது கோவை மண்டல அளவிலான  வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து அமைச்சர். கேஎன்.நேரு பேசியதாவது:

முதல்வர் உத்திரவிற்கு இணங்க கோவைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சாலை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருfகிறது. உலகத்தில் சிறப்பான குடிநீர் கோவையில் உள்ளது. கோவை மாநகரை பொறுத்தவரை அனைத்து சாலைகளும் புதியதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மோசமான சாலைகள் என எந்த சாலை என்று நீங்கள் குறிப்பிட்டு சொன்னால் நாங்கள் அதை பார்த்து விடுவோம். கோவையில் மொத்தம் 680 கிலோமீட்டர் சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கி உள்ளோம். கோவை மாநகராட்சியில் ஆய்வு  செய்ய உள்ளோம். உத்திரபிரதேசம் சாமியார் பற்றிய கேள்விக்கு? சாமியார் சொல்வதெல்லாம் செய்ய முடியுமா? அதற்கு உதயநிதி அவர்களே பதில் கொடுத்து விட்டார். இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் வைத்தாலும் சரி, இந்தியா என்றாலும் சரி, நாங்க ஒன்றிய அரசு என்று தான் கூறுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!