Skip to content
Home » வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Senthil

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

உங்கள் தொகுதிகளில்  தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக – பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும்.அமைச்சர்களின் மாவட்டம் – பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும்.  வெற்றி கிடைக்காவிட்டால் அதற்கு பொறுப்பான அமைச்சர்கள் பதவி  இழக்க நேரிடும். கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும்.

திமுக அரசின் நலத்திட்டங்களுக்காக மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். நாம் மக்களை உரிய முறையில் அணுக வேண்டும்.

 

இவ்வாறு அவர்  கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!