Skip to content

ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்றார் டோனி, முதல்வர் வாழ்த்து

Hall of Fame” என்றால்,  சாதனையாளர்கள் கூடம்,  அல்லது  சாதனைக்கூடம் என்பார்கள்.    விளையாட்டு, கலை, இசை, அறிவியல், போன்ற ஏதாவது ஒரு துறையில்  சாதனை புரிந்த, புகழ் பெற்ற நபர்களைப் போற்றவும், அங்கீகரிக்கவும், நினைவுகூரவும் பயன்படும் ஒரு அமைப்பு Hall of fame. 

தற்போது ஐசிசி Hall of Fame-ல்  டோனி இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே இந்த அமைப்பில் கபில்தேவ், கவாஸ்கர்,  கும்ளே,  பேடி,   டெண்டுல்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Hall of Fame ல் இடம் பிடித்த  டோனிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  முதல்வர் ஸ்டாலின்,  எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள்.

அதிகமுறை ODI அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ICC கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டப்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.

அமைதியால் தலைமைப் பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர்.
எப்போதும் Thala For A Reason என்றே போற்றப்படுவீர்கள்” என தெரிவித்துள்ளார். இதுபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!