Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காயங்கள் ஆறும்…. வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்….. டைரக்டருக்கு பாராட்டு

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்  அங்கு  வாழை தமிழ் சினிமா பார்த்தார். அதைத்தொடர்ந்து  முதல்வர் தனது  வலைத்தள பக்கத்தில் வாழை இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜூக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின்  வாழ்த்து செய்திக்கு  இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!