Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்ப பதிவு, ஆவண பதிவேற்றம் மற்றும் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பெற கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் பி. சத்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் மேலும், கூறியதாவது:
1973–1974 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, உயர்கல்வித் துறையில் சிறப்புமிக்க அரசுக் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தற்போது 17 இளநிலைப் பட்டப்படிப்புகள், 14 முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் 9 முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மே 7 ஆம் தேதி முதல் இணையவழியில் நடைபெற்று வருகிறது.
பி.ஏ. தமிழ் – 50 இடங்கள்; பி.ஏ. ஆங்கிலம் மற்றும் பி.ஏ. வரலாறு (தமிழ் வழி) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 52 இடங்கள்; பி.காம்., பி.காம். கூட்டுறவியல், பி.பி.ஏ., பி.ஏ. அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம் மற்றும் பி.சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தலா 60 இடங்கள்; பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. வேதியியல் (தமிழ் வழி), பி.எஸ்சி. மின்னணுவியல், பி.ஏ. பொதுநிர்வாகவியல், பி.எஸ்சி. புவியியல் மற்றும் பி.எஸ்சி. உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தலா 40 இடங்கள்; பி.ஏ. வரலாறு (ஆங்கில வழி) – 35 இடங்கள்; பி.எஸ்சி. வேதியியல் (ஆங்கில வழி) – 31 இடங்கள்; பி.எஸ்சி. காட்சி தொடர்பியல் – 30 இடங்கள்; பி.ஏ. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் – 25 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.மேலும், சுழற்சி-II முறையில் பி.காம். மற்றும் பி.சி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு தலா 40 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, மொத்த அங்கீகரிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 955 ஆகும்.
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.மணி வரை செயல்பட்டு வருகிறது.
இணையவழி விண்ணப்பப் பதிவு மற்றும் சேர்க்கை தொடர்பான உதவிகளுக்கு 7811916788, 9626657703, 9865781740 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.

error: Content is protected !!