Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

கோவை விமான நிலையம் பின்புறம், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்..!

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகிய மூவரையும் போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதன் பின்னா் அரசு தரப்பு விசாரணை நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது

இதில் மொத்தம் 112 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிப் பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.

error: Content is protected !!