நேரடி கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிப்பதாக விவசாயிகள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் எச்சரிக்கை
தஞ்சை அருகே சூரியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வந்த அமைச்சர் பூங்கொத்து குடுத்து வரவேற்ற சிறுவர்கள்
தமிழக முதலமைச்சர் ஆணையர் படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 13.91 கோடி மதிப்பீட்டில் 24 முடிவுற்ற புதிய கட்டிடங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்
நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வுகள் நடத்தி விவசாயிகளின் கருத்துகளையும் கேட்டு வருகிறோம் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிப்பதாக விவசாயிகள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரேவதி மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
