Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை (சிலம்பம், கேரம், சாலையோர சைக்கிள் போட்டிகள்) மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று  துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துகளை

தெரிவித்துக்கொள்கிறேன் என அரியலூர் மாவட்ட  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் முனைவர்.ஆ.அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, உடற்கல்வி ஆய்வாளர் (பொ) குணசேகரன், பள்ளி தாளாளர்கள் கோவிந்தசாமி, ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!