சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதிக்கு ரோசா மிஸ்டிகா (18) என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசா மிஸ்டிகா அவரது தாயுடன் வசித்து வந்தார். ரோசா தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இது அவரது தாயாருக்கு தெரியவர, ரோசா மிஸ்டிகாவை அவர் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ரோசா மிஸ்டிகா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
