Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…கல்லூரி மாணவர் தற்கொலை…

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தூர் வர்ஷன் (17). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைனில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் செந்தூர் வர்ஷன் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே செந்தூர் வர்ஷன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!