Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் கட்ட திட்டமிட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு.

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆறு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு திடல் உள்ளது.
இந்த விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் புதிதாக விளையாட்டு அரங்கம் கட்ட

திட்டமிட்டுள்ளது.
அரசினர் கலைக் கல்லூரியில் மாணவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு அரங்கம்

அமைக்காமல் பொது இடத்தில் கட்ட வேண்டிய விளையாட்டு அரங்கத்தை, விளையாட்டு ஆணையம் அரசு கல்லூரியில் கட்ட திட்டமிட்டுள்ளதால்,
எதிர்காலத்தில் இந்த இடம் விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமானதாக மாறிவிடும் என்பதால் விளையாட்டு ஆணையம் கல்லூரி விளையாட்டு திடலில் கட்டும் விளையாட்டு அரங்கத்தை கைவிடக் கோரி இக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி விளையாட்டு திடலில் ஒரு பகுதியில் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஹோட்டல் கட்டுவதற்காக பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

எனவே அரசினர் கலைக் கல்லூரியில் விளையாட்டு ஆணையம் கட்டும் விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திடக்கோரி இக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!