சென்னை கோட்டை (சென்னை போர்ட்) ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 5-வது பெட்டியில் ஒரு சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து-பரபரப்பு
