கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 28 லட்ச ரூபாய் கையாடல் செய்துவிட்டு, பணத்தைத் திரும்பித் தர மறுத்த ஊழியர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த நிதி பங்குதாரர்.
கரூர் பழைய பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் ‘ஸ்டார் பைனான்சியர்ஸ்’ நிறுவனத்தின் பங்குதாரர் லோகநாதன் மற்றும் அவருடன் இணைந்து ஐந்து நபர்கள் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். இவரது நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தவணை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு

வந்தார். மாத சம்பளமாக 20,000 ரூபாய் பெற்று வந்த சுரேஷ், கடந்த ஓராண்டில் போலி வாடிக்கையாளர்களின் பெயரில் சுமார் 28 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைத் திட்டமிட்டு கையாடல் செய்துள்ளார்.
இந்தக் கையாடல் பணத்தில் சுமார் 5 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாயைத் தனது மனைவி

பாரதியின் வங்கி கணக்கிற்கு ‘ஜி-பே’ மூலம் சுரேஷ் அனுப்பி உள்ளார். மேலும் புதிய கார், இருசக்கர வாகனம், தங்க நகை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கையாடலைக் கண்டுபிடித்த நிறுவனத்தினர் கேட்டபோது, தவறை ஒப்புக்கொண்டு சுரேஷ் ஒருசில மாதங்களில் திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 16-ஆம் தேதி பணம் தருவதாகக் கூறி லோகநாதனைத் தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார் சுரேஷ் அங்கு சென்ற லோகநாதனை, சுரேஷின் மனைவி பாரதி கட்டையால் தாக்கியதோடு, மாமியார் சித்ராவின் தூண்டுதலின் பேரில் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காயமடைந்த லோகநாதன் கரூர் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சுரேஷ், மருத்துவமனையில் சேர்ந்து போலீசாரிடம் பொய் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீசார் லோகநாதன் மற்றும் நிறுவனப் பங்குதாரர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், லோகநாதன் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான லோகநாதன், திருச்சி மண்டல ஐ.ஜி- மற்றும் கரூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இதன் அடிப்படையில் போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் லோகநாதன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், மோசடிப் பணத்தை மீட்டுத் தந்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
