Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கரூரில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பரங்குன்றம் தீபத் திருநாளில் நீதிமன்றத் தீர்ப்பின்படி தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகரப் பகுதிக்குட்பட்ட வெங்கமேட்டில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முருக பக்தர்கள், சிவனடியார்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் தீபத் திருநாளில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “தமிழக அரசே! நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்று”, “முருக பக்தர்களை வஞ்சிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, குழந்தை ஒன்றுக்கு முருகப்பெருமான் வேடம் அணிவித்து, கையில் வேல் வழங்கி பங்கேற்கச் செய்திருந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

error: Content is protected !!