Skip to content

மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க அதற்கான சட்டம் இயற்ற வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம், கணூரில் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் தலைவர் ஜக்ஜித்சிங்டல்லேவால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு அவரது கோரிக்கையை நிறைவேற்றி உயிரை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஒன்று திரண்டு டெல்லி சென்று போராட்டம் நடத்துவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில்

டெல்லியில் விவசாயிகள் போராடுவதற்கு மரியாதை வழங்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டும் ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசுக்கும் கொடுத்தனர்.

அதில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தர வேண்டும், அதுவரை விவசாயம் கடைகளை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தில் கை வைக்கக்கூடாது, கிராமங்கள் தோறும் கமிட்டி அமைத்து விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், மேலும், 11கோரிக்கைகளை சேர்த்து வழங்கியது. இதுவரை அந்த அறிக்கைக்கு தொடர்பான எந்தவித செயல்பாடும் இல்லை.
இதனை கண்டித்து
டல்லேவால் கடந்த 53நாளாகசாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை காப்பாற்ற யாராலும் முடியாது.

மத்திய அரசு காப்பாற்றவில்லை என்பதை கண்டித்து தான் வரும் 22ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அரசு அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 60ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர், வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. இதனைக் கண்டித்து வரும் குடியரசு தினமான 26ஆம் தேதி இந்தியா முழுவதிலும் டிராக்டர் பேரணி நடத்த உள்ளோம். இதன் ஒரு பகுதியாக திருச்சி சமயபுரத்திலிருந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணி நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஐஜி மற்றும் மாநகர காவல் துறை ஆணையரை சந்தித்த மனு வழங்க உள்ளோம்.

மாநில அரசு நிதி இல்லை எனக் கூறுகிறது. மத்திய அரசிடம் 6100 கோடி கேட்டால் 200 கோடி தான் கொடுத்தார்கள் என தெரிவிக்கின்றனர்.
எனவே, எங்களை டெல்லியில் போராட அனுமதிக்க வேண்டும்.
அல்லது உங்களது எம்பிக்களை போராடட்டும், உலக நாடு பார்க்கட்டும் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. மாநில அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை தெரிவியுங்கள்.

நடைபெற உள்ள ஈரோடு இடைத்தேர்தலில் கோரிக்கையில் வலியுறுத்தி போட்டியிடலாமே என்ற கேள்விக்கு.

கடந்த முறை நாங்கள் போட்டிட்டு வெற்றி பெறுவதற்காக செல்லவில்லை மத்திய அரசு எங்களுக்கு சொன்ன இரண்டு மடங்கு லாபம் தருவதாக கூறிவிட்டு தரவில்லை என்பதே தெரிவிப்பதற்காகத்தான் சென்றோம். இடைத்தேர்தல் ஆட்சியை நிர்மாணிக்க போவதில்லை அனைத்து கட்சியும் போட்டியிலிருந்து விலகி விட்டது. இது அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி தரும். 40 ரூபாய் 60ரூபாய் என்ற ஊழல் 80ரூபாய் வரை மாறும் இவர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.

மாநில நிலம் ஒருங்கிணைப்பு குழு சட்டம் கொண்டு வந்து ஒட்டுமொத்தமாக நிலங்களை கையகப்படுத்தி நில வங்கி என்பதை உருவாக்கியுள்ளனர். அதில் கொண்டு வகைப்படுத்தி கணக்கிட்டு வருகின்றனர். எனவே ஒட்டுமொத்த நிலங்களையும் எடுத்து விடுவார்கள். தொடர்ந்து இதே நிலையை தமிழ்நாடு அரசு தொடர்கிறது என்றால் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய விவசாயிகளின், ஆதரவோடு தமிழக அரசு விவசாயிகளும் ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக தேர்தல் களத்தை பயன்படுத்துவோம் இதனை எச்சரிக்கையாக நாங்கள் தெரிவிக்கிறோம். இதில் சமரசத்திற்கு இடமில்லை.
நிரந்தர எதிரி என்பதே திமுக பெற்றுவிடும் என்ற அச்சமெல்லாம் விவசாயிகளுக்கு இருக்கிறது.

கலைஞர் ஆட்சிக்கு வந்த பொழுது நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்தார். விவசாய நிலத்தை எல்லாம் எடுத்துக் கொண்டனர். இப்போது முன்னாள் , இந்நாள் மந்திரி எல்லாம் சுமார் 5000 ஏக்கர், பத்தாயிரம் ஏக்கர் நிலம் .போராடக்கூடாது என்பதையும் தெரிவிக்கிறீர்கள். என்ன வழி என்பதை தெரிவிக்க வேண்டும் என கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பல்வேறு விவசாய சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!