Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் – எஸ்பிக்கள் மாநாடு: சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் அதிரடி உத்தரவுகள்

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களின் மாநாடு இன்று (29.06.2026) நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர், “வெளிப்படையான, நேர்மையான, லஞ்சமற்ற சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்துள்ள மக்களுக்கு, ரேஷன், கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக வழங்க வேண்டும். மனு கொடுக்க வரும் மக்களைத் தங்கள் வீட்டு மனிதர்களாகக் கனிவோடு நடத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.

சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம் என்றும், தவறு செய்தவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். முக்கியமாகப் பெண்களின் பாதுகாப்பில் 100% சமரசமற்ற அணுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், போக்ஸோ (POCSO) மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யத் தாமதிப்பதைச் சகிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.

மேலும், பள்ளிகளுக்கு அருகில் சோதனைகளைத் தீவிரப்படுத்தி போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், எல்லை மாவட்டங்களில் கனிம வளங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வேண்டும், பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களைக் கண்காணிக்க வேண்டும், மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்தார். பேரறிஞர் அண்ணாவின் ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்’ என்ற தாரகமந்திரத்தின்படி, அதிகாரிகள் உண்மையாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்ற வேண்டும் என்று கூறி முதல்வர் தனது உரையை நிறைவு செய்தார்.

error: Content is protected !!