Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று, தைலாபுரம் சென்று  பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து  பூச்செண்டு வழங்கி சிறிது நேரம் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது:

ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தேன்.   கூட்டணி குறித்து பேசவில்லை.  திமுக கூட்டணியில்   எந்த  கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் தான் முடிவு செய்வார்.

பாமகவில்  குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பாஜகதான் காரணம். திமுக காரணம் என அன்புமணி புரிதலின்றி பேசுகிறார். கூட்டணி வைக்கும் கட்சிகளை ஸ்வாஹா செய்யும் வழக்கம் பாஜகவுக்கு தான் உண்டு. பாஜகவை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுகவை அன்புமணி விமர்சிக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!