Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ்சில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காங்., எம்எல்ஏ

அரசு பஸ்சில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காங்., எம்எல்ஏ-

தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இப்ராகிம்பட்டினம் தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மல்ரெட்டி ரங்கா ரெட்டி (70). தெலுங்கானாவில் உள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் பயன் பெறும் வகையில் மகாலட்சுமி இலவச பஸ் பயண திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இவர், தன்னுடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில், அரசின் மகாலட்சுமி இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் பயனாளிகள் எந்த வகையில் பயன் பெறுகின்றனர் என்று தெரிந்து கொள்வதற்காகவும், திட்டம் மக்களை சரியாக சென்று சேர்ந்து இருக்கிறதா? என்று சோதனை செய்வதற்காகவும், அரசு பஸ் ஒன்றில் ஏறியுள்ளார்.

அந்த பஸ் இப்ராகிம்பட்டினம் பகுதியில் இருந்து புறப்பட்டு, யம்ஜால் நோக்கி சென்றுள்ளது. அப்போது பஸ்சின் இருக்கையில் அமர்ந்தபடி, கல்லூரி மாணவி ஒருவரிடம் உரையாடினார். இந்த திட்டத்தின் மூலம் ரூ.45 ஆயிரம் வரை சேமிப்பாக மாணவிக்கு கிடைத்துள்ளது என்று கூறிய அவர், மாணவியை தொட்டு பேசியுள்ளார். பஸ்சில் நின்று கொண்டு பயணித்து வந்த அந்த மாணவி, அதனை விரும்பாமல் நகர்ந்து செல்ல முயன்றிருக்கிறார்.

அப்போதும் அவர் தொடர்ந்து மாணவியின் கையை பிடித்தபடி பேச முயன்றார். இந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியின் பொது செயலாளர் பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறும்போது, அரசு பஸ் கண்டக்டரிடம் இருந்து புகார் பெற வேண்டும்.

அந்த எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்றார். பெண்களை அவமதிப்பதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்றுடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன என்றார்.

error: Content is protected !!