Skip to content

விவசாய உபகரணங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை- காங்., போராட்டம்

விவசாய உபகரணங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காந்தியின் பெயரை நீக்கி புதிய பெயருடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலக வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில், நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அண்ணா சிலை அருகிலும் மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசின் திட்டத்திலிருந்து நீக்கியதை கண்டித்தும், மீண்டும் பழைய பெயரிலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த வழியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் என திரளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!