தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே சோட்டையன்தோப்பில் தங்கி கட்டிட வேலை செய்துவந்த கேரளத்தைச் சேர்ந்த சுனில் (57), வீட்டில் தனியாக இருந்த 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சுனிலைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்து தாளமுத்துநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை உடனடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
