Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சர்ச்சையான தவெக ரீல்ஸ் வீடியோ: கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஒன்றிய செயலாளர் நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள தளவராம்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குச் சென்ற தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியினர், வகுப்பறைக்குள் புகுந்து மாணவ, மாணவிகளிடம் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி “இவர் யார்” எனக் கேட்டுள்ளனர். மாணவர்கள் “விஜய்” என்று கூற, அங்கிருந்த தவெகவினர் “விஜய் அண்ணா” என்று சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். பின்னர், விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறையில் மாட்டி அவர்கள் ரீல்ஸ் (Reels) வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகி அரசியல் கட்சியினரிடையே கடும் கண்டனங்களை எழுப்பியது. இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டதை அடுத்து, தவெக நிர்வாகி ராஜேஷைக் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!