Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்- சர்ச்சை

ஷூஅணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்-சர்ச்சை

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணிகளை பார்வையிடச் சென்ற போது கோபுரத்தின் மீது அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு  ஏறிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலின் கிழக்கு கோபுரத் திருப்பணியை ஆய்வு செய்யச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் , காலில் ஷூ அணிந்து கொண்டு கோபுரத்தில் ஏறியது சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

தெரிவித்துவரும் நிலையில், பக்தர்களிடம் அமைச்சர் ரமேஷ் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் அமைச்சருடன் சென்ற கோயில் அதிகாரிகள், தவெக கட்சியினர் மற்றும் பலர்  ஸ்ரீரங்கம் ரங்கனின் கிழக்கு கோபுரத்தில் கிருஷ்ணர் சன்னதி அமைந்த இடத்திற்கு மேலே காலணி அணிந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணி தனது எக்ஸ் தளத்தில், “பக்தர்களிடம் அமைச்சர் ரமேஷ் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுரத்தின் திருப்பணியினை பார்வையிடச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள் காலணி அணிந்து சென்று அரங்க நாதனை இழிவு படுத்திய தையும் ரமேஷ் அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த ஸ்ரீரங்க தொகுதி மக்களை இழிவுபடுத்தியதையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!