Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி... திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவதானபுரத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று ரெங்கராஜ் வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பழைய கம்பிகள் மற்றும் ஒரு மின் விளக்கை பயன்படுத்தி பொருத்தினார். அப்பொழுது ரெங்கராஜ் கம்பியை சுவிட்ச் போர்டில் சொருகிய போதுதிடீரென்று துரதிஷ்டமாக அவர் மீது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக ரெங்கராஜ் ஆட்டோவில் ஏற்றி திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!