Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வருகிற பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுதா, விற்பனைக்குழு செயலாளர் சரசு முன்னிலையில், மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைப் பெற்ற பருத்தி ஏலத்தில் கும்பகோணம், இதன் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த 657 விவசாயிகள் 165 மெ.டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சார்ந்த வணிகர்கள், கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி உட்பட பிற மாவட்டத்தை சார்ந்த வணிகர்கள் பருத்தி மறைமுக ஏலத்தில் கலந்துக் கொண்டு பருத்திக்கு அதிகப் பட்சம் ரூ 7699, குறைந்தப் பட்சம் ரூ 5289,
சராசரி ரூ 6829 க்கும் விலை நிர்ணயித்தனர். மேலும் இதில் விவசாயிகள் நன்கு மலர்ந்த பருத்தியினை தூசிகளை நீக்கி, ஈரப்பதம் இல்லாமல் எடுத்து வரும் பட்சத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடும் என்பதுடன், தரம் குறைவான பருத்தியை தனியான தாட்டுகளாக கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!