புகையிலை பொருட்கள் விற்பனை… வாலிபர் கைது
திருச்சி, செந்தண்ணீர்புரம் லோகோ செட் அருகில் தடை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு செந்தண்ணீர்புரம் பாறையடி தெருவை சேர்ந்த பிரபாகரன் (38) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு பிரபாகரனை ஜாமினில் விடுதலை செய்தனர்.
கஞ்சா விற்பனை செய்த தம்பதி.. கணவன் கைது.. மனைவி எஸ்கேப்
திருச்சி ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுவருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ராம்ஜி நகர் புங்கனூர் காந்தி நகரை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 41) மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க சென்ற போது பூர்ணிமா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு மாயகிருஷ்ணனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3,750 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய அவரது மனைவி பூர்ணிமாவை தேடி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்த கிருஷ்ணன் என்பவரது மனைவி துளசி (வயது 75 )என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பிறகு துளசியை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
