கொரியர் லாரி சென்டர் மீடியினில் மோதி விபத்து டிரைவர் பலி
திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). கொரியர் அலுவலக டிரைவர்.
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஒட்டி வந்தார். கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே வளைவில் திரும்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் மோதி, முன்னால் சென்ற வாகனத்தின் மீது பின்னர் அங்குள்ள கட்டிடத்தின் மீது மோதிய நின்றது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரில் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி மயங்கி விழுந்த சாவு
திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் மேரி (60). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து பணம் திருடிய பெண் கைது
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ராஜா ( 50). சமையல் மாஸ்டர் இரவு இவர் வீட்டில் தூங்கச் சென்றார். மறுநாள் காலை சமையலறை மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.1000 காணாமல் போனதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த திருட்டில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சேர்ந்த ஆனந்தி என்ற மேரி 30 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா கோதை மாத்திரை விற்பனை செய்த 9 பேர் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மெண்ட், செசன்ஸ் கோர்ட்டு, பொன்மலை, கே.கே. நகர், உறையூர், கோட்டை பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த துளசி வயது 83 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதே போல் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மணப்பாறை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி 64, முசிறி பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் 32, பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த கணேசன் 29, பொன்மலை பகுதியை சேர்ந்த நாகராஜ் 42, கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் 46, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் 22,ஆகிய 7 பேரைபோலீசார் கைது செய்தனர்.மேலும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்த ஜமீன் பாஷா 22 சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற சந்தோஷ் குமார் 23 ஆக இருவரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து கஞ்சா,1 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 200 போதை மாத்திரைகள் ஒரு செல்போன் மற்றும் 760 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
