Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் வயநாடா? பாஜகவை எதிர்த்து போட்டியிடுங்கள்.. ராகுலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்..

கேரளாவின் வயநாடு தொகுதியில் இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்தி இந்த தேர்தலில் உபி மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு காங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதற்கு காரணம் அமேதி தொகுதியில் கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை தோற்கடித்த

கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, ராகுலுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பதால்  ராகுலை அமேதியில் களம் இறக்க வேண்டாம் என நினைத்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் அவரை வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. காங்கிரசின் இந்த அறிவிப்பிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் டி.ராஜா கூறியதாவது: கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதியில் வயநாடு ஒன்று. அங்கு எங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டோம். இந்நிலையில் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால் ராகுல் காந்தி ஒரு மாநிலத்தைச் சேர்ந்த தலைவர் அல்ல. அவர் தேசிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். அவரைப் போன்ற முக்கியமான தலைவர்கள், வேறு ஏதாவது தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து நேரடியாக போட்டியிட வேண்டும். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் அவர் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்? தங்களின் முக்கிய இலக்கு பாஜகவா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியா என்பதை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் சுய பரி சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு டி.ராஜா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!