Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர், மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கும், ஆந்திர ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராகவும், இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், பீகார் ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநர் சவுகான், மேகாலயா ஆளுநராகவும் இடமாற்றம் செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த தமிழிசை, இல. கணேசன் ஆகியோர் ஆளுநராக உள்ள நிலையில் 3வதுநபராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!