Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிலிண்டர் முன்பதிவு இடைவௌி 35 நாட்களாக அதிகரிப்பு.. ஷாக்

சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 35 நாட்களாக அதிகரிப்பு என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி 35 நாட்களாக அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் முன்பதிவுக்கான அவகாசம் நீட்டிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகர்ப்புறங்களில் 25 நாட்கள், கிராமப்புறங்களில் 45 நாட்கள் இடைவெளியில் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசு அறிவிப்பை நம்புவதா? அல்லது கேஸ் ஏஜென்சி அனுப்பிய தகவலை நம்புவதா? என்று வாடிக்கையாளர்கள் குழப்படமடைந்துள்ளனர். சிலிண்டர் இல்லாமல் தவிக்கும் நகர்புற மக்கள் 35 நாட்கள் காத்திருந்தே முன்பதிவு செய்ய முடியும் என்கிற நிலை இருக்கிறது. இதுபற்றி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்களை வழங்கி நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!